என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தெலுங்கு தேசம் கட்சி"
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதன்படி, 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கையின்போது காலையில் வெளியான முன்னணி நிலவரங்கள் அடிப்படையில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்தது.
காலை 10 மணி நிலவரப்படி 64 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரியவந்தது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 54 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கு தேசம் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இதே நிலை தொடர்ந்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
நகரி:
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி ஐதராபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் 2005-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்தபோது சந்திரபாபு நாயுடு வழக்கு விசாரணைக்கு தடை பெற்றார். இதையடுத்து இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து சந்திரபாபு நாயுடு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஐதராபாத் லஞ்ச ஒழிப்பு துறை கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு என்.டி.ராமராவ் மனைவி லட்சுமி பார்வதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து லட்சுமி பார்வதி இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மே 13-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். #ChandrababuNaidu #ndramarao #propertycase
ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிடும்.
இதேப்போல் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் விஜயவாடா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கேசினேனி ஸ்ரீனிவாஸ் தனது குடும்பத்தினருடன் சென்று குண்டெல்லா பகுதியில் வாக்களித்தார். ஆந்திராவில் ஆளும் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #ChandrababuNaidu
தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தலைவர்கள் வர இருப்பதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக எல்லையோரம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்காக தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.
விஜயவாடாவில் நாளை அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்கிறார். 31-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜியுடன் அரவிந்த் ஜெக்ரிவால் பிரசாரம் செய்ய உள்ளார். #LokSabhaElections2019
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி 7 கட்டங்களாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் உள்ள ஓங்கோல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ChandrababuNaidu #TDP
ஐதராபாத்:
ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இருந்து வருகிறது. இதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவும் தீவிர அரசியலில் இருந்து வருகிறார். அவருக்கு தற்போது 45 வயது ஆகிறது. இவரது கணவர் பெயர் அனில்குமார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஷர்மிளாவையும், பாகுபலி பட கதாநாயகன் பிரபாசையும் இணைத்து கிசு கிசு செய்திகள் இணைய தளங்களில் உலா வருகின்றன.
இது ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியான தெலுங்தேசம் கட்சி தான் இந்த கிசு கிசுவை பரப்பி வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.
இது சம்பந்தமாக ஷர்மிளா தனது கணவர் அணில்குமாருடன் சென்று ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனிகுமாரை சந்தித்தார்.
அதில், தன்னைப்பற்றி தெலுங்குதேசம் கட்சியினர் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த சந்திப்புக்கு பின் வெளியே வந்த ஷர்மிளா நிருபர்களிடம் கூறியதாவது:-
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் எங்கள் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் என்னைப்பற்றி தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். 2014 பாராளுமன்ற தேர்தலின் போதும் இதேபோல வதந்திகளை பரப்பினார்கள். இப்போதும் அதேபோன்ற வதந்தி பரப்பப்படுகிறது.
இதன் பின்னணியில் தெலுங்குதேசம் கட்சி இருப்பதாக உறுதியாக கருதுகிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.
நான் எனது கணவர், குழந்தைகளுடன் ஒரு தாயாக, மனைவியாக குடும்ப பிணைப்புடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு மோசமான வதந்தியை பரப்புகிறார்கள். நான் இதில் மவுனம் சாதித்தால் தவறான அர்த்தம் உருவாகி விடும். எனவே தான் புகார் கொடுத்தேன்.
இவ்வாறு ஷர்மிளா கூறினார். #Prabhas #JaganmohanReddy #sharmilareddy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்